தென் ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதிப் போட்டியில், இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின.
இந்த போட்டியில் தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய இந்திய பெண்கள் அணி, அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில், முதல் கோலை அடித்து இந்தியாவின் கணக்கைத் தொடங்க, தொடர்ந்து 23-வது நிமிடத்தில் இந்துமதி இரண்டாவது கோலை அடித்தார். மூன்றாவது கோலை 37-வது நிமிடத்தில் மூன்றாவது கோல் அடிக்க, முதல் பாதி ஆட்டம் நிறைவடைந்தது.