இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றுவரும் இங்கிலீஸ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நவ்ரிச் சிட்டி எஃப்சி - டோட்டன்ஹோம் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடந்த இப்போட்டியில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்ததால், வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்டி ஷுட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
அப்போது நவ்ரிச் அணியின் கீப்பர் டிம் க்ருலின், எதிரணிகள் அடித்த பந்துகளின் குறிப்புகளை தனது வாட்டர் பாட்டிலில் குறிப்புகளாக எடுத்து, அவர்கள் அடுத்ததாக அடிக்கும் ஷாட் குறித்து யூகித்துள்ளார்.