செனிகல் தேசிய கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் பாபா பவுபா டயோப். இவர் செனிகல் அணிக்காக 63 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
2002ஆம் ஆண்டு நடந்த ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரில் பிரான்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் செனிகல் அணி சார்பாக இவர் அடித்த கோல், செனிகல் அணிக்கு காலிறுதி வாய்ப்பை பெற்றுக்கொடுத்தது.
அன்று முதல் செனிகல் நாட்டின் உலகக்கோப்பை நாயகனாக பாபா பவுபா டயோப் அந்நாட்டு மக்களால் போற்றப்பட்டு வந்தார். இவர் நேற்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஃபிஃபா ட்விட்டர் பக்கத்தில், டயோப் பல சாதனைகள் செய்திருப்பார். ஆனால் என்றும் 2002ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரின் முதல் கோல் அடித்ததற்காக என்றும் நினைவில் கொள்ளப்படுவார் எனப் பதிவிடப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து ஏராளமானோர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். செனிகல் நாட்டின் ஜனாதிபதி பதிவிட்டுள்ள ட்வீட்டில், தலைசிறந்த கால்பந்து வீரருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.
2002ஆம் ஆண்டு ஃபிஃபா கால்பந்து தொடருக்காக எப்போதும் நினைவில் இருப்பார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கால்பந்து உலகிற்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இதையும் படிங்க:மேட்ச் ஜெய்க்கலனா என்னபா... இதயத்தை வென்ற இந்திய இளைஞர்...!