ஜெர்மனியில் நடப்பு சீசனுக்கான பண்டஸ்லிகா கால்பந்து தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பேயர்ன் முனிச் அணி 6-1 என்ற கோல் கணக்கில் வெர்டர் (Werder) அணியை பந்தாடியது.
இதில், ஆச்சரியம் என்னவென்றால், 24 நிமிடம் வரை முதல் கோல் பின்தங்கிய நிலையிலிருந்த பேயர்ன் அணி அதற்கு அடுத்து தங்களது சிறப்பான ஆட்டத்தால் கோல் மழை பொழிந்தது. குறிப்பாக, பேயர்ன் அணியின் நட்சத்திர முன்கள வீரர் ஃபிலிப் கோடின்ஹோ 45, 63, 79ஆவது ஆகிய நிமிடங்களில் ஹாட்ரிக் கோல் அடித்து மிரட்டினார்.
இப்போட்டியில் 82ஆவது நிமிடத்தில் பேயர்ன் வீரர் கோடின்ஹோவுக்கு பதிலாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 20 வயது இளம் நியூசிலாந்து வீரர் சர்பிரீத் சிங் களமிறங்கினார். இதன் மூலம், பண்டஸ்லிகா தொடரில் பங்கேற்ற முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.