தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஜெர்மன் கோப்பை: பிரவுன்ச்வீக்கை வீழ்த்தி டார்ட்மவுண்ட் அசத்தல் வெற்றி! - ஜெர்மன் கோப்பை

ஜெர்மன் கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டார்ட்மவுண்ட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஐன்ட்ராச் பிரவுன்ச்வீக் அணியை வீழ்த்தியது.

Sancho scores to seal Dortmund's 2-0 win in German Cup
Sancho scores to seal Dortmund's 2-0 win in German Cup

By

Published : Dec 23, 2020, 7:36 PM IST

ஜெர்மன் கோப்பை கால்பந்து தொடர் அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (டிச.23) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டார்ட் மவுண்ட் அணி - ஐன்ட்ராச் பிரவுன்ச்வீக் (Eintracht Braunschweig) அணியுடன் மோதியது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கிய இப்போட்டியின் ஆரம்பம் முதலே டார்ட்மவுண்ட் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கியது. ஆட்டத்தின் 12ஆவது நிமிடத்தில் மட்ஸ் ஹுமல்ஸ் முதல் கோலை அடித்து அசத்தினார்.

பின்னர் தனது வலிமையான டிஃபென்ஸையும் வெளிக்காட்டிய டார்ட்மவுண்ட் அணி, எதிரணியின் கோலடிக்கும் அனைத்து முயற்சிகளையும் தகர்த்தது. இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் டார்ட்மவுண்ட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் டிஃபென்ஸ் ஆட்டத்தை வெளிப்படுத்திய டார்ட்மவுண்ட், ஆட்டத்தின் இறுதிவரை எதிரணியை கோலடிக்க விடாமல் தடுத்தது.

பின்னர் ஆட்டத்தின் கூடுதல் நேரமான 90+2ஆவது நிமிடத்தில் டார்ட்மவுண்ட் அணியின் சாஞ்ஜோ 2ஆவது கோல் அடித்தார். இதனால் ஆட்டநேர முடிவில் டார்ட்மவுண்ட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஐன்ட்ராச் பிரவுன்ச்வீக் அணியை வீழ்த்தி அசத்தியது.

இதையும் படிங்க:முதல் டெஸ்ட் போட்டியின் தோல்விக்கான காரணத்தை விளக்கும் சச்சின்!

ABOUT THE AUTHOR

...view details