தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தெற்காசிய போட்டி: நேபாளத்தை தூக்கிச் சாப்பிட்ட இந்திய மகளிர் அணி! - Bala Devi

தெற்காசிய விளையாட்டில் மகளிர் கால்பந்து பிரிவில் இந்திய அணி 6-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தியது.

India womens football team
India womens football team

By

Published : Dec 6, 2019, 3:32 PM IST

13ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தின் தலைநகர் காத்மண்டு, போக்ஹராவில் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற மகளிர் கால்பந்து போட்டியில், நடப்பு சாம்பியன் இந்திய அணி, இலங்கை அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. வழக்கம் போல் ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே இந்திய வீராங்கனைகள் கோல் அடிக்கும் முனைப்பில் ஈடுபட்டனர்.

இதனால், ஆறாவது நிமிடத்திலியே இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை டாங்மெய் கிரேஸ் ஆட்டத்தின் ஏழாவது நிமிடத்தில் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். அதன்பின், இந்திய வீராங்கனைகள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் கோலாக மாற்றினர். இறுதியில் இந்திய அணி 6-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தியது.

இந்தியா சார்பில் சந்தியா ஆர் (10, 25ஆவது நிமடம்), ரதன்பாலா தேவி (18, 88ஆவது) ஆகியோர் தலா இரண்டு கோல்களை அடித்தனர். இதைத்தொடர்ந்து, நாளை நடைபெறவுள்ள மற்றொரு லீக் போட்டியில் இந்திய அணி, நேபாளத்தைச் சந்திக்கவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details