அல்மன்சில் (போர்ச்சுகல்): உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் போர்ச்சுகல் அணி, அயர்லாந்து குடியரசு அணியுடன் மோதியது.
அப்போட்டியில், போர்ச்சுகல் அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ போட்டியின் இறுதி நிமிடங்களில் மிரட்டலாக அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்தார்.
ஜாம்பவானை முந்தி முதலிடம்
இதன்மூலம், சர்வதேச அரங்கில் ரொனால்டோ இதுவரை 111 கோல்களை பதிவு செய்து, அதிக கோல்களை அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற யூரோ கோப்பையில் ரொனால்டோ, 109ஆவது கோலை அடித்து ஈரான் கால்பந்து ஜாம்பவான் அலிடாய் சாதனையை சமன் செய்திருந்தார்.
பயிற்சியாளர் தந்தையைப் போன்றவர்
ரொனால்டோ, கடந்த 2018ஆம் ஆண்டு முதல் பிரீமியர் லீக் தொடரில் ஜூவென்டஸ் அணிக்கு விளையாடி வந்த நிலையில், தான் முதன்முதலில் விளையாடி வந்த மான்செஸ்டர் சிட்டி கிளப் அணிக்கு மீண்டும் அவர் திரும்பியுள்ளார்.
தனது வளர்ச்சிக்கு, தன்னுடைய பயிற்சியாளர் அலெக்ஸ் பெர்குசனுக்கு மிகப்பெரிய பங்குள்ளது என்றும் கால்பந்தில் அவர் எனக்கு தந்தையைப் போன்றவர் என்றும் ரொனால்டோ சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
மான்செஸ்டர் சிட்டி அணி, ரொனால்டோ தலைமையில் மூன்று பிரீமியர் லீக் பட்டத்தை வென்றுள்ளது. மேலும், மான்செஸ்டர் சிட்டி அணிக்காக ரொனால்டோ 292 போட்டிகளில் விளையாடி 118 கோல்களை அடித்துள்ளார்.
மான்செஸ்டர் சிட்டியில் CR7
மான்செஸ்டர் சிட்டி அணி, ஜூவென்டஸ் அணியிலிருந்து ரொனால்டோ விலகி தங்கள் அணியில் இணைந்ததை நேற்று முன்தினம் (ஆக. 31) உறுதிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: THE OVAL TEST: அஸ்வின் எனும் துருப்புச் சீட்டை பயன்படுத்துவாரா கோலி?