கால்பந்தில் யுவண்டஸ் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ, பார்சிலோனா அணியின் கேப்டன் மெஸ்ஸி, இருவருக்கும் இடையே ஆரோக்கியமான போட்டி நிலவிவருகிறது. இருவரும் தலா ஐந்து முறை பலான் டி ஆர் விருதை பெற்றிருந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான பலான் டி ஆர் விருதை மெஸ்ஸி ஆறாவது முறையாக வென்று சாதனைப் படைத்தார்.
இந்த நிலையில், நடப்பு ஆண்டின் சீரி ஏ கால்பந்து போட்டியில் சிறந்த வீரருக்கான விருதை ரொனால்டோ பெற்றுள்ளார். 2018 ஃபிபா உலக்ககோப்பை தொடருக்குப் பிறகு இத்தாலியின் யுவண்டஸ் அணிக்கு விளையாட ஒப்பந்தமான இவர், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.