தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ரோனால்டோ உள்பட கால்பந்து நட்சத்திரங்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து! - கிறிஸ்துமஸ் வாழ்த்து

உலகெங்கிலும் உள்ள கால்பந்து வீரர்கள் வெள்ளிக்கிழமை (டிச.25) தங்கள் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

Christmas Cristiano Ronaldo Juventus Mohamed Salah கால்பந்து நட்சத்திரங்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து கிறிஸ்துமஸ் வாழ்த்து ரோனால்டோ
Christmas Cristiano Ronaldo Juventus Mohamed Salah கால்பந்து நட்சத்திரங்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து கிறிஸ்துமஸ் வாழ்த்து ரோனால்டோ

By

Published : Dec 25, 2020, 9:13 PM IST

ஹைதராபாத்: கிறிஸ்துமஸ் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 தேதியன்று, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை முன்னிட்டு கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், ஜுவென்டஸின் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் மற்றும் குழந்தைகளுடன் ஒரு படத்தை ட்விட்டரில் பகிர்ந்து கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், “அனைவருக்கும் எங்களின் கருணை நிறைந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.! அன்பு, ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி ஆகியவை நிரம்பட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தனது ரசிகர்களுக்கு செல்சியா எழுதியுள்ள கடிதத்தில், "அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

லிவர்பூல் தியாகோ அல்கேன்ட்ரா, “இது கிறிஸ்மஸ் நேரம்! உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் வகையில் லிவர்பூலின் முகமது சலா தனது குடும்பத்துடன் சமூக ஊடகங்களில் ஒரு படத்தை வெளியிட்டுள்ளார்.

மான்செஸ்டர் யுனைடெட்டின் டோனி வான் டி பீக், ட்விட்டரில் "அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! இந்தக் கடினமான காலங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கால சிறப்பு நாள்களை அனுபவிக்கவும்” என வாழ்த்தியுள்ளார்.

ரியல் மாட்ரிட்டின் செர்ஜியோ ராமோஸ் ரசிகர்களை வரவேற்று எழுதியுள்ள பதிவில், "மெர்ரி கிறிஸ்மஸ்! வாழ்த்துகள் மற்றும், மிக முக்கியமாக, அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் பெற பிரார்த்திக்கிறேன்” எனக் குடும்பத்துடன் ஒரு படத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

ஸ்பானிஷ் மொழியில் அட்லெடிகோ மாட்ரிட் வீரர் லூயிஸ் சுவாரெஸ் ட்விட்டில், "அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். இதனை எனது இதயத்திலிருந்து, உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். மெர்ரி கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் வகையில், கிறிஸ்துமஸ் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 அன்று கொண்டாடப்படுகிறது.

இந்தப் பண்டிகை தினத்தில், உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் பாடல் பாடி பிரார்த்தனை நடத்தி ஒருவருக்கொருவர் பரிசுகளைப் பரிமாறிக்கொள்வார்கள்.!

இதையும் படிங்க: அடிலெய்டு தோல்விக்கு பாடம் புகட்டும் முனைப்பில் இந்தியா!

ABOUT THE AUTHOR

...view details