கிரிக்கெட்டில் எப்படி சச்சின் அல்லது லாரா ஆகிய இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன்? என்பதற்கு பதில் கூற முடியாதோ, அதேபோன்ற கேள்விதான் மெஸ்ஸி அல்லது ரொனால்டோ ஆகியோரில் யார் சிறந்த கால்பந்து வீரர் என்பதும்.
இந்தக் கேள்வி கால்பந்து உலகின் ஜாம்பவான் பீலேவிடமும் கேட்கப்பட்டது. பிரேசிலின் பில்லாடோ என்ற யூ ட்யூப் சேனலுக்கு பேட்டியளித்த பீலே, '' தற்போதைய கால்பந்து உலகில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 10 வருடங்களாக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதனால் அவர்தான் சிறந்த வீரர். ஆனால் மெஸ்ஸியின் ஆட்டத்தையும் யாராலும் மறக்க முடியாது.
ஹிகோ, ரொனால்டினோ, ரொனால்டோ நஹாரியோ, பிரான்ஸ் பெக்கன், ஜோஹன் க்ரூஃப் ஆகியோர் எப்போதும் எனக்கு பிடித்த வீரர்கள்.