2018ஆம் ஆண்டு ரியஸ் மாட்ரிட் அணியிலிருந்து சீரி ஏ தொடரின் யுவண்டஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். உலகிலேயே அதிகத் தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றார். இந்நிலையில் ரொனால்டோவின் வருகைக்கு பிறகு யுவண்டஸ் அணியின் செயல்பாடுகள், பல்வேறு நிலைகளில் மாறியுள்ளது.
யுவண்டஸ் அணிக்காக ரொனால்டோ அதிகம் செய்துள்ளார்: ஜியார்ஜியோ - ஜியார்ஜியோ
யுவண்டஸ் அணிக்காக நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அதிகம் செய்துள்ளார் என அந்த அணியின் சகவீரர் ஜியார்கியோ தெரிவித்துள்ளார்.
Ronaldo gave Juventus a lot: Giorgio Chiellini
இதுகுறித்து அந்த அணியின் ஜியார்ஜியோ பேசுகையில், ''ரொனால்டோ எங்களுக்கு எதிராக ஆடியபோது அதிக கோல்கல் அடித்துள்ளார். ஆனால் இப்போது அதிர்ஷ்டவசமாக எங்கள் அணி வீரராக உள்ளார். அவர் எப்போதுமே வேறு விதமான ஆட்டக்காரர். அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். யுவண்டஸ் அணிக்காக அவர் அதிகம் செய்துள்ளார். அவரைப் போன்று ஒரு சாம்பியன் வீரரை வைத்துக்கொண்டு போட்டிகளில் வெல்ல முடியவில்லை என்றால், யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது'' என்றார்.