பெலோ ஹொரிசொண்டேயில் சுய தனிமைப்படுத்திக்கொண்ட ரொனால்டினோ, தான் நலமாக இருப்பதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ரொனால்டினோ, " ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க நான் நேற்று பிஹெச் வந்தேன். அப்போது பரிசோதனை மேற்கொண்டதில், கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அறிகுறியற்ற பாதிப்பு இருக்கிறது. நான் நன்றாக இருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
கால்பந்து வீரர் ரொனால்டினோவிற்கு கரோனா - பராகுவேயில் தனது சகோதரர் ரபார்டோவுடன் வீடு சிறை
லீட்ஸ்: பிரேசில் முன்னாள் கால்பந்து வீரர் ரொனால்டினோ கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ரொனால்டினோவிற்கு கரோனா
போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு பராகுவேயில் தனது சகோதரர் ரபார்டோவுடன் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரொனால்டினோ ஐந்து மாதங்களுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் பிரேசிலுக்குத் திரும்பினார்.