தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இன்னும் சில நாள்களில் விடுவிக்கப்படவுள்ள ரொனால்டினோ! - பராகுவே விசாரணைக் குழு

பராகுவே விசாரணைக் குழுவினருக்கும், ரொனால்டினோவுக்கும் இடையே மனு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால், அவர் இன்னும் சில நாள்களில் விடுவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

ronaldinho-set-for-release-after-plea-deal
ronaldinho-set-for-release-after-plea-deal

By

Published : Aug 8, 2020, 4:34 PM IST

கால்பந்து விளையாட்டில் தலைசிறந்த வீரராகத் திகழ்பவர் பிரேசிலின் ரொனால்டினோ. குழந்தைகள் தொண்டு நிகழ்ச்சிக்காக இவரும், இவரது சகோதரர் ராபர்டோவும் கடந்த மார்ச் 4ஆம் தேதி பராகுவே நாட்டிற்குச் சென்றனர்.

அப்போது போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைந்ததாகக் கூறி, இவர்கள் இருவரையும் பராகுவே காவல் துறையினர் மார்ச் 6ஆம் தேதி கைதுசெய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து போலி பாஸ்போர்ட் பயன்படுத்தியது தனக்கு தெரியாததால் ஜாமின் வழங்கக் கோரி ரொனால்டினோ தரப்பிலிருந்து, மூன்று முறை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஆனால், மூன்று மூறையும் அவரது கோரிக்கையை பராகுவே நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து ரொனால்டினோ, அவரது சகோதரர் ராபர்டோ ஆகியோருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் ஹோட்டலில் சிறை வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இருவருக்கும் பராகுவே விசாரணைக் குழுவுக்கும் இடையே மனு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், இருவரும் இன்னும் சில நாள்களில் விடுவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகிய ஸ்விட்டோலினா, கிகி பெர்ட்டன்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details