கால்பந்து விளையாட்டில் தலைசிறந்த வீரராகத் திகழ்ந்தவர் பிரேசிலின் ரொனால்டினோ. இவர், தனது சிறப்பான ஆட்டத்தால் பிரேசில் அணிக்குப் பல வெற்றிகளைத் பெற்றுத் தந்துள்ளார். குறிப்பாக, 2002 ஃபிபா உலகக்கோப்பைக் கால்பந்துத் தொடரைப் பிரேசில் அணி வெல்ல மிக முக்கிய காரணமாக இருந்தார்.
சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி, பார்சிலோனா, ஏ.சி. மிலன் உள்ளிட்ட கிளப் அணிக்காகவும் விளையாடியுள்ளார். இந்த நிலையில், குழந்தைகள் தொண்டு நிகழ்ச்சி ஒன்றிக்காக, இவரும், இவரது சகோதரர் ராபர்டோ ஆகியோரும் கடந்த மார்ச் 4ஆம் தேதி பாராகுவே நாட்டிற்குச் சென்றனர்.
அப்போது போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைந்ததாகக்கூறி, இவர்கள் இருவரையும் பாராகுவே காவல்துறையினர் மார்ச் 6ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து, போலி பாஸ்போர்ட் பயன்படுத்தியது தனக்குத் தெரியாதததால் ஜாமின் வழங்கக் கோரி ரொனால்டினோ தரப்பிலிருந்து, மூன்றுமுறை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.