பராகுவே நாட்டிற்குள் போலியான ஆவணங்களை பயன்படுத்தி நுழைய முயன்றதாக ரொால்டினோ மற்றும் அவரது சகோதரர் ராபர்டோ ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 32 நாள்கள் சிறையில் இருந்த பின், அவர் வீட்டுக்காவலுக்கு மாற்றப்பட்டார்.
போலி பாஸ்போர்ட் விவகாரம்: ரொனால்டினோ மனம் திறப்பு
பராகுவே நாட்டில் உள்ள ஹோட்டலில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த ரொனால்டினோ, தனது வீட்டுக்காவல் அனுபவம் பற்றி பேசியுள்ளார்.
இதையடுத்து பராகுவே நாட்டில் உள்ள ஹோட்டலில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதனிடையே அவர் பேசுகையில், ''கிட்டத்தட்ட 60 நாள்கள் வீட்டில் அடங்கியுள்ளோம். தங்களது வீடுகளில் உள்ள அனைவரும் பழகிய விஷயங்களை செய்ய முடியாமல் போவதை எண்ணிப் பார்க்க வேண்டும். இன்னும் சில நாள்களில் பழைய நிலைக்கு அனைவரும் திரும்புவோம் என நம்புகிறேன்.
பார்சிலோனா எனக்கு இரண்டாம் தாய் வீடு. அந்த மக்களின் அன்புக்கு எப்போதும் நான் கடமைப்பட்டுள்ளேன். என்னைப் பற்றி அக்கரை கொண்டு குறுஞ்செய்தி அனுப்பிய அனைவருக்கும் நன்றி'' எனப் பேசியுள்ளார்.