ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில், பன்டெஸ்லீகா, யுஇஎஃப்ஏ கால்பந்து தொடர்களில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி 2019-20ஆம் அண்டிற்கான சிறந்த வீரர், மிட் பீல்டர், ஸ்டிரைக்கர், கோல் கீப்பர், பயிற்சியாளர் ஆகிய விருதுகள் இன்று (அக்.02) வழங்கப்பட்டன.
இதில் பெயர்ன் முனிச் அணியின் நட்சத்திர ஸ்டிரைக்கர் ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி, 2019-20ஆம் ஆண்டிற்கான சிறந்த கால்பந்து வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். சாம்பியன்ஸ் லீக், பன்டெஸ்லீகா உள்ளிட்டத் தொடர்களில் சிறப்பாக விளையாடியதற்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அதேசமயம் செல்சி அணியின் பெர்னில்லே ஹார்டர், ஆண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த கோல் கீப்பர்களாக ஆடவர் பிரிவில் பெயர்ன் முனிச் அணியின் மானுவல் நியூயரும், மகளிர் பிரிவில் லியன் அணியின் சாரா பௌஹாடி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.