ஆண்டுதோறும் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பால் உலகின் தலைசிறந்த வீரர்களைக் கௌரவிக்கும் ‘ஃபிஃபா கால்பந்து விளையாட்டில் சிறந்த வீரர்களுக்கான விருது’ வழங்கும் விழா, கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டிசம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று (டிச.17) காணொலி வாயிலாக நடைபெற்ற ஃபிஃபா கால்பந்து விருது வழங்கும் நிகழ்ச்சியில், இந்த ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான ஃபிஃபா விருதை போலந்து நாட்டின் நட்சத்திர வீரர் ராபர் லெவாண்டோவ்ஸ்கிக்கு வழங்கப்பட்டது. அதேசமயம் இந்த ஆண்டின் சிறந்த கால்பந்து வீராங்கனை விருதை இங்கிலாந்தின் லூசி புரான்ஸிற்கு வழங்கப்பட்டுள்ளது.
ஃபிஃபா விருதுகளும், வீரர்களின் பட்டியலும்
- சிறந்த கால்பந்து வீரர் - ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி (போலாந்து)
- சிறந்த கால்பந்து வீராங்கனை - லூசி புரோன்ஸ் (இங்கிலாந்து)
- சிறந்த கோல் கீப்பர் (ஆடவர்) - மானுவல் நியூயர் (ஜெர்மனி )
- சிறந்த கோல் கீப்பர் (மகளிர்) - சாரா புஹாதி (பிரான்ஸ்)
- சிறந்த பயிற்சியாளர் (ஆடவர்) - ஜுர்கன் குளோப் (ஜெர்மனி / லிவர்பூல் எஃப்சி)
- சிறந்த பயிற்சியாளர் (மகளிர்) - செரீனா விக்மேன் (நெதர்லாந்து / டச்சு தேசிய அணி)
ஃபிஃபா ஆடவர் உலக லெவன் அணி: