தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐஎஸ்எல்: டிராவில் முடிந்தத மும்பை - ஹைதராபாத் போட்டி - ஐஎஸ்எல் சீசன் 7

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் மும்பை சிட்டி எஃப்சி - ஹைதராபாத் எஃப்சி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் கோல் ஏதுமின்றி டிராவில் முடிவடைந்தது.

Resilient Hyderabad play out goalless draw with toppers Mumbai
Resilient Hyderabad play out goalless draw with toppers Mumbai

By

Published : Jan 17, 2021, 6:28 AM IST

கோவாவில் நடைபெற்று வரும் ஐஎஸ்எல் சீசன் 7 கால்பந்து தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் நேற்று (ஜனவரி 16) நடைபெற்ற லீக் போட்டியில் ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலின் முதலிடத்திலிருக்கும் மும்பை சிட்டி எஃப்சி அணி - நான்காம் இடத்திலிருக்கும் ஹைதராபாத் எஃப்சி அணியை எதிர்கொண்டது.

போட்டி தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் தங்களது வலிமையான டிஃபென்ஸ் ஆட்டத்தை கையிலெடுத்து, எதிரணியின் கோல் அடிக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டைப் போட்டனர். இதனால் முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி சமனில் முடிந்தது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தின் இறுதி வரை போராடிய இரு அணிகளும் கோலடிக்கத் தவறினர். இதனால் இப்போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலில் மும்பை சிட்டி எஃப்சி அணி 26 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஹைதராபாத் எஃப்சி அணி 16 புள்ளிகளைப் பெற்று 4ஆவது இடத்திலும் நீடித்து வருகின்றன.

இதையும் படிங்க: 'மான். யுனைடெட் சிறந்த அணி' - ஜூர்கன் க்ளோப்

ABOUT THE AUTHOR

...view details