ஸ்பெயினின் முன்னணி கால்பந்து லீகான ’லா லீகா’ தொடரின் முக்கிய போட்டியில் ரியல் மாட்ரிட் அணி வெலன்சியா அணியுடன் மோதியது. இந்த ஆட்டத்தின் முதல் பாதியில், இரு அணிகளும் கோலடிக்க கடும் முயற்சியில் ஈடுபட்டும் பலன் கிடைக்கவில்லை.
முதல் பாதியில் கோல் ஏதுவும் விழாத நிலையில், இரண்டாவது பாதியில் வெலன்சியா அணி முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 66ஆவது நிமிடத்தில் வெலன்சியா வீரர் ஹூகோ டுரோ ஆட்டத்தின் முதல் கோலை அடித்தார்.
தோல்வியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரியல் மாட்ரிட் அணியை காக்கும் விதமாக அந்த அணி வீரர் வினிசியர் 86ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். இதையடுத்து ஆட்டம் 1-1 என சமநிலைக்கு வந்தது.