2020 கால்பந்து உலகக்கோப்பை போட்டி மத்திய கிழக்கு நாடான கத்தாரில் நடக்கவுள்ளது. இதற்குத் தயாராகிவரும் கத்தார், கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானங்களை ஒவ்வொன்றாகத் திறந்தவருகிறது. அந்த வகையில், நேற்று 'எஜுகேஷன் சிட்டி ஸ்டேடியம்' என்ற மைதானத்தைத் திறந்துவைத்தது.
காணொலி வாயிலாக நடந்த இந்தத் திறப்பு விழாவில் பேசிய 2020 கத்தார் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான ஒருங்கிணைப்பாளர் அல்-தால்வாடி, "கோவிட்-19 பெருந்தொற்று தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழலில், கால்பந்து போட்டிகளை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து இங்கிலீஷ் பிரீமியர் லீக், பண்டெல்லியா ஒருங்கிணைப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினேன்" என்றார்.
தற்போது திறக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் 40 ஆயிரம் பேர் வரை அமர்ந்து விளையாட்டைப் பார்க்கலாம்.