இங்கிலாந்தில் கிளப் அணிகளுக்கு இடையே நடத்தப்படும் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரில் லிவர்பூல் அணி, முதல் இடத்தில் உள்ளது. இதனிடையே நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி, மற்றொரு உள்ளூர் கிளப் அணியும் நடப்பு சாம்யினுமான மான்செஸ்டர் சிட்டி அணியுடன் மோதியது.
மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கிய இப்போட்டியில் முதல் நிமிடத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் கோல் அடிப்பதில் தீவிரம் காட்டினர். இருப்பினும் அவற்றை இரண்டு கோல் கீப்பர்களும் தடுத்து நிறுத்தினர். பின்னர் மான்யு வீரர் மார்க்கஸ் ராஷ்போர்டு 23ஆவது நிமிடத்தில் பெனால்டி முறையில் கோல் அடித்தார். இதைத் தொடர்ந்து மீண்டும் அதே அணியின் ஆண்டனி மார்ஷியல் 29ஆவது நிமிடத்தில் கோல் அடிக்க அந்த அணி வேகமாக 2-0 என முன்னிலை பெற்றது.