பிரீமியர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்றைய போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணியை எதிர்த்து சௌதாம்டன் அணி ஆடியது. கடந்த போட்டியில் சொந்த மைதானத்தில் பிரீமியர் லீக் சாம்பியன் லிவர்பூல் அணியை வீழ்த்தியது. ஆனால், இந்தப் போட்டியில் சௌதாம்டன் அணியின் சொந்த மைதானத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி ஆடியது. இதனால் மான்செஸ்டர் சிட்டி அணி வெற்றிபெறுமா, பெறாதா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில், ஆட்டம் தொடங்கிய சில மணி நேரங்களில் சௌதாம்டன் அணியைச் சேர்ந்த சே ஆடம்ஸ் முதல் கோலை அடித்து அசத்தினார். இதனைத் தொடர்ந்து மான்செஸ்டர் சிட்டி அணி சார்பாக கோல் அடிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் எதிர் அணியின் கோல் கீப்பர் அலெக்ஸ் மெக்கார்த்தியின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் ஆட்ட நேர இறுதியில் சௌதாம்டன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தியது.