2019-20ஆம் ஆண்டு சீசனுக்கான இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துத் தொடர், இங்கிலாந்தில் பார்வையாளர்களின்றி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்று முன் தினம் (ஜுலை 4) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி, பார்ன்மவுத் அணியை எதிர்த்து விளையாடியது.
ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாடிய பார்ன்மவுத் அணியின் ஜூனியர் ஸ்டானிஸ்லாஸ் 16ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியின் கோல் கணக்கை தொடங்கி வைத்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, மான்செஸ்டர் அணியின் கிரீன்வுட் ஆட்டத்தின் 29ஆவது நிமிடத்திலும், ராஷ்போர்ட் 35ஆவது நிமிடத்திலும், மரசியல் 45ஆவது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல்களை அடித்து அசத்தினர்.