இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவருகிறது. இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லிவர்பூல் எஃப்சி அணி - எவர்டன் அணியை எதிர்கொண்டது.
பரபரப்பான இப்போட்டியின் மூன்றாவது நிமிடத்திலேயே எவர்டன் அணியின் ரிச்சர்லிசன் கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் எவர்டன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடிய எவர்டன் அணி, லிவர்பூல் அணியில் கோலடிக்கும் முயற்சிகளை தகர்த்தது. பின்னர் ஆட்டத்தின் 83ஆவது நிமிடம் எவர்டன் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.