தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பிரீமியர் லீக் தொடர்: பேர்ன்மவுத் அணியின் கோல்கீப்பருக்கு கரோனா தொற்று உறுதி...! - கோல்கீப்பர் ஆரோன் ராம்ஸ்டால்

லண்டன்: பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்றுள்ள பேர்ன்மவுத் அணியின் கோல்கீப்பர் ஆரோன் ராம்ஸ்டால் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.

premier-league-bournemouth-goalkeeper-aaron-ramsdale-tests-positive-for-coronavirus
premier-league-bournemouth-goalkeeper-aaron-ramsdale-tests-positive-for-coronavirus

By

Published : May 26, 2020, 5:01 PM IST

இங்கிலாந்தின் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் ஜூன் மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் கால்பந்து வீரர்கள் பயிற்சிக்கு திரும்பியுள்ளனர். இந்த வீரர்கள் மற்றும் அணியின் பயிற்சியாளர்கள் என 996 பேருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 8 பேருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர்கள் அனைவரும் 7 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆரோன் ராம்ஸ்டால்

இந்நிலையில் பிரீமியர் லீக் தொடரில் பேர்ன்மவுத் அணியின் 22 வயதாகும் கோல்கீப்பர் ஆரோன் ராம்ஸ்டால் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ''எனது பரிசோதனை முடிவுகள் என்னை ஆச்சரியப்படுத்தியுள்ளது. நான் யாருடனும் தொடர்பில் இல்லை. எவ்விதமான அறிகுறிகளும் தெரியவில்லை. ஆரோக்கியமாகவே உள்ளேன். இருந்தும் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியாக உள்ளது. சில நேரங்களில் நாம் எதிர்பார்க்காதது கூட நடக்கும். அதுபோல்தான் எனக்கு நடந்துள்ளது'' என்றார்.

இதையும் படிங்க:அக்ரம், வாக்கர், வார்னே ஆகியோரை எதிர்த்து விராட் ஆடியிருந்தால்...!

ABOUT THE AUTHOR

...view details