2018-19 ஆண்டுக்கான யூ.ஈ.எஃப்.ஏ. நேஷன்ஸ் லீக் தொடர் இறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியை எதிர்த்து நெதர்லாந்து அணி விளையாடியது. இதில் முதல் பாதி தொடங்கியது முதலே ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டில் போர்ச்சுகல் அணி எடுத்துக்கொண்டது. 11ஆவது நிமிடத்தில் போர்ச்சுகல் அணிக்கு கிடைத்த கார்னர் வாய்ப்பை அந்த அணியின் புரூனோ ஃபெர்னாண்டஸ் வீணடிக்க, நெதர்லாந்து அணியின் தடுப்பாட்டம் போர்ச்சுகல் அணி வீரர்கள் முன் பலிக்காமல் போனது.
இதனையடுத்து ஆட்டத்தின் 28ஆவது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் சில்வா அடித்த கார்னர் ஷாட்டை ஜோஸ் தனது தலையில் முட்டி கோலாக்க முயன்றதை நெதர்லாந்து அணி கோல் கீப்பர் தடுத்தார். இதனையடுத்து இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. முதல் பாதி ஆட்டம் கோல் இல்லாமல் முடிந்தது.