பொள்ளாச்சியில் கால்பந்து விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சி ஐவர் அணி கால்பந்து விளையாட்டு கழகம் மற்றும் ஸ்பாட்டன்ஸ் யுனைடட் கிளப் சார்பாக நடைபெறும் இப்போட்டிகள் பொள்ளாச்சி நகராட்சி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
பொள்ளாச்சியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி! - மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டி
கோவை: பொள்ளாச்சியில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் பிஆர்எஃப்சி அணியை எதிர்த்து ஆடிய ஈகிள் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இதில் கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். இந்த அணிகள் இரண்டு சுற்றுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகளின் முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டி வரும் ஞாயிறுக்கிழமை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.5 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.3 ஆயிரம், கோப்பைகள் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பிஆர்எஃப்சி அணியை எதிர்த்து ஆடிய ஈகிள் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.