தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஃபிபா தாத்தா மறைவு: 1982 - 2018 வரை உலகக்கோப்பை கால்பந்து தொடருக்குப் பயணித்த ரசிகரின் பயணம்! - 10 உலகக்கோப்பை கால்பந்து தொடரை நேரில் பார்த்த இந்தியர் மறைவு

இந்தியாவில் கால்பந்து விளையாட்டின் அதீதிவிர ரசிகரும், 10 உலகக்கோப்பை கால்பந்து தொடர்களை நேரில் பார்த்தவருமான மேற்குவங்கத்தைச் சேர்ந்த பன்னலால் சாட்டர்ஜி தனது 86ஆவது வயதில் காலமானார்.

Pannalal Chatterjee
Pannalal Chatterjee

By

Published : Dec 19, 2019, 4:30 AM IST

இந்தியாவில் கிரிக்கெட் போட்டிக்கு ரசிகர்கள் அதிக முன்னுரிமை தந்தாலும், கேரளா, மேற்குவங்கம் போன்ற சில மாநிலங்களில் கால்பந்து விளையாட்டுதான் மிகவும் பிரபலம். அப்பகுதியைச் சேர்ந்த ரசிகர்கள் கிரிக்கெட்டை விட கால்பந்து விளையாட்டிற்கே முன்னுரிமை அளிப்பார்கள்.

பன்னலால் சாட்டர்ஜி - சைதாலி

அந்தவகையில், கொல்கத்தாவைச் சேர்ந்த வயதான தம்பதி பன்னலால் சாட்டர்ஜி - சைதாலி இருவரும் கால்பந்து விளையாட்டின் மீது அதீத ஆர்வம் கொண்டவர்கள். கால்பந்து விளையாட்டின் மீது கொண்டுள்ள ஈர்ப்பினால் இவர்கள் 10 ஃபிபா உலகக்கோப்பை தொடரை நேரில் சென்று ரசித்துள்ளனர்.

ரஷ்யாவில் நடந்த ஃபிபா உலகக்கோப்பைக்கான டிக்கெட்டுகளுடன் பன்னலால் அவரது மனைவி

கடந்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரையும் இவர்கள் நேரில் சென்று பார்த்தது அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது. 1982 ஸ்பெயினில் நடைபெற்ற ஃபிபா உலகக்கோப்பையிலிருந்துதான் இந்த தம்பதியினரது ஃபிபா பயணம் தொடங்கியது. தனது நண்பரின் உதவி மூலம் 1982இல் நடைபெற்ற தொடரை நேரில் சென்று பார்க்கும் அனுபவத்தை பன்னலால் சாட்டர்ஜி அவரது மனைவி சைதாலி ஆகியோர் பெற்றனர்.

ஃபிபா பயணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் பன்னலால் சாட்டர்ஜி - சைதாலி

இந்த அனுபவத்தை இனி எங்கு ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்றாலும் நாம் பார்க்க வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்துள்ளனர். அவர்களது பயணத்தில் பிரேசிலின் பீலே, அர்ஜென்டினாவின் மரடோனா ஆகிய ஜாம்பவான்களுடன் இவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டு பல மறக்க முடியாத அனுபவங்களைப் பெற்றிருந்தனர்.

இந்நிலையில், 86 வயதான பன்னலால் சாட்டர்ஜி கடந்த வாரம் பாத்ரூமில் வழுக்கிவீழ்ந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று உயிரிழந்தார். இந்தியாவில் மிகவும் தீவிர கால்பந்து ரசிகரான இவரது மறைவு கால்பந்து ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. இவர்களது ஃபிபா பயணத்தில் 1994இல் அமெரிக்காவில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரின் போது பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலேவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டது தங்களது வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் என இவர் நினைவுகூர்ந்தார்.

பீலே உடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பன்னலால் - சைதாலி

தனது ஃபிபா கால்பந்து பயணத்தில் 1986 உலகக்கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணியின் அப்போதைய கேப்டன் மரடோனா, இங்கிலாந்து அணிக்கு எதிராக கையில் அடித்த கோல் Hand of God (கடவுளின் கை) என சொல்லப்படும் அந்த கோல்தான், மிகவும் பிடித்த தருணம் என அவர் கூறியிருந்தார்.

கால்பந்து மீது அதீத ஈர்ப்பு கொண்ட பன்னலால் சாட்டர்ஜி

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு ஃபிபாவால் நடத்தப்படும் உலகக்கோப்பை கால்பந்து தொடரை இவர்கள் பார்வையிட்டதன் மூலம் சுமார் 40 ஆண்டுகள் கால்பந்து விளையாட்டின் மீது அதீத காதலை வெளிப்படுத்தி வந்த பன்னலால் சாட்டர்ஜியின் மறைவுக்கு ஐ லீக் கால்பந்து தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளது. மிஸ் யூ ஃபிபா தாத்தா!

ABOUT THE AUTHOR

...view details