தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பிரேசில் கால்பந்து வீரர் நெய்மருக்கு கரோனா பாதிப்பு! - கோவிட் 19 நெய்மார்

கால்பந்து விளையாட்டின் முன்னணி வீரரான நெய்மருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

Neymar
Neymar

By

Published : Sep 2, 2020, 10:02 PM IST

பி.எஸ்.ஜி. அணிக்கு விளையாடி வரும் பிரேசில் நாட்டின் முன்னணி கால்பந்தாட்ட வீரர் நெய்மருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்த தகவலை பி.எஸ்.ஜி. கிளப் நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முன்னணி கால்பந்தாட்ட கிளப்பான பி.எஸ்.ஜி., கரோனா பாதுகாப்பு விதிமுறைகளின்படி தனது வீரர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டது. இதில், அந்த அணியைச் சேர்ந்த நெய்மர், ஏஞ்சல் டி மரியா, லயாண்ட்ரோ பரேடஸ் ஆகியோருக்கு கரோனா உறுதியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த மூன்று பேரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

நடப்பாண்டு சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பி.எஸ்.ஜி. அணி, அண்மையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியைச் சந்தித்தது.

இதையடுத்து பிரெஞ்ச் லீக் போட்டியின் புதிய சீசன் தொடங்கியுள்ள நிலையில், பி.எஸ்.ஜி. வரும் 10ஆம் தேதி முதல் போட்டியை எதிர்கொள்கிறது. தற்போது கரோனா பாதிக்கப்பட்டுள்ள நெய்மர் உள்பட மூன்று வீரர்கள் இந்தப் போட்டியில் விளையாடுவார்களா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

இதையும் படிங்க:சிஎஸ்கே - வில் நான் இன்னும் பல ஆண்டுகள் விளையாடவுள்ளேன் - சுரேஷ் ரெய்னா!

ABOUT THE AUTHOR

...view details