பிரேசிலை சேர்ந்த கால்பந்து வீரர் நெய்மர், சர்வதேச கால்பந்து அரங்கில் மெஸ்ஸி, ரொனால்டோவுக்கு அடுத்தபடியாக தலைசிறந்த வீரராக திகழ்கிறார். இருப்பினும், ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் வேண்டுமென்ற கீழே விழுந்து விமர்சனத்துக்கு ஆளானார். தற்போது இவர் பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் செயின்ட் ஜெர்மன் (பி.எஸ்.ஜி) அணிக்காக விளையாடி வருகிறார்.
இதனிடையே, கடந்த ஏப்ரல் மாதம் பிரெஞ்சு கோப்பை கால்பந்துத் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில், ஃபெனால்டி ஷூட் அவுட் முறையில் ரேன்னஸ் அணி 6-5 என்ற கணக்கில் பி.எஸ்.ஜி அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.
போட்டி முடிவடைந்த பின் பி.எஸ்.ஜி அணி வீரர்கள் ஓய்வறைக்கு திரும்பியபோது, ரேன்னஸ் அணி ரசிகர் ஒருவர் நெய்மரை கிண்டல் செய்ததால், கோபமடைந்த நெய்மர் அவரை தாக்கினார். இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையானது.
இதையடுத்து, தன்னை தாக்கியதால் ரேன்னஸ் ரசிகர் நெல்சன், நெய்மருக்கு எதிராக காவல் துறையினரிடம் வழக்குத் தொடர்ந்தார். இதனால், நெய்மருக்கு மூன்று போட்டிகளில் விளையாட பிரெஞ்சு கால்பந்து சம்மேனளம் தடை விதித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நெய்மர் நேற்று பொபிக்னி (Bobigny) காவல் துறையினரிடம் விளக்கமளித்தார். நெய்மரின் சிறப்பான ஆட்டத்தால் நடப்பு சீசனில் பிஎஸ்ஜி அணி 15 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது