பிரேசில் நாட்டைச் சேர்ந்தப் பிரபல கால்பந்து நட்சத்திரம் நெய்மர், கரோனா (கோவிட்19) வைரஸ் நிவாரண நிதியாக 10 லட்சம் டாலர் அளித்துள்ளார். இந்த நிதியுதவி ஐநா குழந்தைகள் நல நிதி மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் லூசியானோ ஹக் என்பவரின் அறக்கட்டளைக்கும் செல்கிறது.
ஐரோப்பிய மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் அதிகமாக கோவிட்-19 பாதிக்கப்படாத நாடாக பிரேசில் உள்ளது. இந்நாட்டில் பத்து ஆயிரம் பேர் கோவிட்-19 வைரஸ் தாக்குதலுக்குள்ளாகி உள்ளனர். உயிரிழப்பு 359 ஆக உள்ளது. சீனாவின் வூகான் மாகாணத்திலிருந்து பரவிய கோவிட்-19 வைரஸூக்கு அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.