பார்சிலோனா அணிக்காக ஆடிய நெய்மரின் ஒப்பந்தம் 2016ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தை பார்சிலோனா நிர்வாகம் 2017ஆம் ஆண்டு வரை நீட்டித்தது. இதனால் நெய்மருக்கு பார்சிலோனா அணி சார்பாக போனஸ் தொகை நிலுவையில் இருந்தது.
நெய்மர் பார்சிலோனாவுக்கு 6.7 மில்லியன் யூரோ வழங்க வேண்டும்! - நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர்\
பார்சிலோனா நிர்வாகத்திற்கு நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர் 6.7 மில்லியன் யூரோக்கள் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நெய்மரை 222 மில்லியன் யூரோ கொடுத்து பிஎஸ்ஜி அணி வாங்கியது. இதனிடையே நெய்மருக்கு வழங்க வேண்டிய போனஸ் தொகையான 43 மில்லியன் யூரோவை பார்சிலோனா நிர்வாகம் கொடுக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றம், பிஎஸ்ஜி உடனான ஒப்பந்தத்திற்காக பார்சிலோனா அணியின் நீட்டிப்பு ஒப்பந்தத்தை பாதியோடு முறித்துச் சென்ற நெய்மர், பார்சிலோனா அணிக்கு 6.7 மில்லியன் யூரோக்கள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.