கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவது பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும் உயிரிழந்தும் உள்ளனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் வருகின்றனர்.
அந்த வரிசையில் பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஜூனியருக்கும் இம்மாதம் 2ஆம் தேதி கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் இத்கவலை அவர் விளையாடி வந்த பி.எஸ்.ஜி., கால்பந்து கிளப் உறுதிப்படுத்தியது. இதைத்தொடர்ந்து நெய்மர் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தர்.