கால்பந்து கிளப் அணிகளுக்கான பிரஞ்சு கோப்பை இறுதிப் போட்டியில், பாரிஸ் செயிண்ட் ஜெர்மன் அணியை எதிர்த்து ரேன்னஸ் அணி விளையாடியது. அதில் ரேன்னஸ் அணி பெனால்டி ஹூட் அவுட் முறையில் 6-5 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இதனையடுத்து பி.எஸ்.ஜி அணி வீரர்கள் ஓய்வறை திரும்பியபோது, ரேன்னஸ் அணி ரசிகர் ஒருவரை கால்பந்து வீரர் நெய்மர் தாக்கினார். இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையானது.
நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மருக்கு மூன்று போட்டிகளில் விளையாடத் தடை! - நெய்மர்
பாரிஸ்: ரசிகர்கரைத் தாக்கிய விவகாரத்தில் பாரிஸ் செயிண்ட் ஜெர்மன் அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மருக்கு மூன்று போட்டிகளில் விளையாட ஃபிரான்ஸ் கால்பந்து சம்மேளனம் தடை விதித்துள்ளது.
நெய்மர்
இதன் காரணமாக கால்பந்து வீரர் நெய்மர் விளையாட மூன்று போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரஞ்சு கால்பந்து சம்மேளனத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது.
மேலும், இந்த நடவடிக்கை குறித்து சம்மேளனத்தின் உயர்மட்ட குழுவிடம் மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும் பாரிஸ் செயிண்ட் ஜெர்மன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.