அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மரடோனா மாரடைப்பால் புதன்கிழமை காலமானார். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள், இவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இவரது மறைவு குறித்து நபோலி அணியின் தலைவர் லாரண்டிஸ் கூறுகையில், '' அன்புள்ள டியாகோ, பலவீனம், வலிமை மற்றும் வாழ்க்கையின் மீது முழுமையான அன்பு ஆகியவற்றிற்கு நீங்கள் ஒரு பெரிய எடுத்துக்காட்டு. ஒரு தனித்துவமான சாம்பியன். உங்கள் பலவீனங்கள், உங்கள் குறைபாடுகள், உங்கள் தவறுகள் எதுவும் உங்கள் மகத்துவத்திற்கு ஒப்பானவை அல்ல.