தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐஎஸ்எல்: முதலிடத்தை தக்க வைத்த மும்பை சிட்டி எஃப்சி! - மும்பை சிட்டி எஃப்சி

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று (ஜனவரி 22) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Mumbai pip East Bengal, open up five-point lead at top in ISL
Mumbai pip East Bengal, open up five-point lead at top in ISL

By

Published : Jan 23, 2021, 8:13 AM IST

கோவாவில் நடைபெற்று வரும் ஐஎஸ்எல் தொடரின் ஏழாவது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் நேற்று (ஜன. 22) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி அணி - ஈஸ்ட் பெங்கால் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.

இப்போட்டி தொடங்கியது முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மும்பை அணிக்கு மொர்தடா ஃபால் (Mourtada fall) ஆட்டத்தின் 27ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் மும்பை சிட்டி எஃப்சி அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி அணியின் வலிமையான டிஃபென்ஸைத் தாண்டி ஈஸ்ட் பெங்கால் அணியால் கோலேதும் அடிக்க முடியவில்லை.

இதனால் ஆட்டநேர முடிவில் மும்பை சிட்டி எஃப்சி அணி 1-0 என்ற கணக்கில் ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலில் மும்பை சிட்டி எஃப்சி அணி 29 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை தக்கவைத்தது.

இதையும் படிங்க:தாய்லாந்து ஓபன்: அரையிறுதியில் அஸ்வினி, ரங்கிரெட்டி இணை!

ABOUT THE AUTHOR

...view details