தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐஎஸ்எல் கால்பந்து: பெங்களூருவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை! - இந்தியன் சூப்பர் லீக்

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி 3-2 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சி அணியை வீழ்த்தியது.

ISL Mumbai beats Bengaluru
ISL Mumbai beats Bengaluru

By

Published : Dec 16, 2019, 5:36 AM IST

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) தொடரின் ஆறாவது சீசனுக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதில், இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பெங்களூரு எஃப்சி அணி, மும்பை சிட்டி அணியை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் மும்பை சிட்டி அணியின் போஸ், ஆட்டத்தின் 12ஆவது நிமிடத்தில் கோலடித்து மும்பை அணியை முன்னிலை படுத்தினார். இதனால் முதல் பாதி ஆட்டத்தில் மும்பை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று சமநிலை வகித்தன.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் வெற்றிக்காகப் போராடினர். இதில் சிறப்பாக விளையாடிய பெங்களூரு அணியின் கிரிக், 58ஆவது நிமிடத்தில் கோலடித்து அசத்தினார். அதன்பின் ஆட்டத்தின் 77ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் சார்லஸ் கோலடிக்கவே ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

அதன்பின் ஆட்டத்தின் 89ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் கேப்டன் சுனில் சேத்திரி கோலடித்து அசத்தியதன் மூலம், ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா இரண்டு கோல்களை அடித்து சமநிலையில் இருந்தது.

இதனையடுத்து வெற்றியை தீர்மானிக்க ஆட்டத்தில் ஐந்து நிமிடங்கள் கூடுதல் நேரமாக வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய மும்பை சிட்டி அணியின் ரவுலின் போர்ஜஸ், ஆட்டத்தின் 94ஆவது நிமிடத்தில் கோலடித்து மும்பை சிட்டி அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

இதன் மூலம் மும்பை சிட்டி அணி 3-2 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சி அணியை வீழ்த்தி, அந்த அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இதையும் படிங்க: கொல்கத்தாவை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறிய கோவா!

ABOUT THE AUTHOR

...view details