கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்தியாவில் இதுவரை 800க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு துறை பிரபலங்கள் தங்களால் முடிந்த நிதியுதவிகளை, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அந்ததந்த மாநில அரசிற்கு அவசரகால நிதியாக வழங்கி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கால்பந்துத் தொடரான ஐ-லீக் தொடரின் நடப்பு சாம்பியன் மோகன் பாகன் அணி, ரூ. 20 லட்சத்தை மேற்கு வங்க மாநில அரசின் அவசர கால நிதியாக வழங்கியுள்ளது.