தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மெஸ்ஸி 51வது ஹாட்ரிக்; எதிரணி ரசிகர்கள் பாராட்டு! - 51st hat-trick for messi

ஸ்பெயினின் லா லிகா கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி 4-1 என்ற கோல் கணக்கில் ரியல் பெட்டிஸ் அணியை வீழ்த்தியது.

51வது ஹாட்ரிக் அடித்த மெஸ்ஸி

By

Published : Mar 19, 2019, 10:34 PM IST

ஸ்பெயினின் லா லிகா கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் ரியல் பெட்டிஸ் அணி, நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே பார்சிலோனா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியது.

இதன் பலனாக பார்சிலோனா அணி 4 அட்டகாசமான கோல் அடித்து மிரட்டியது. ரியல் பெட்டிஸ் அணியால் பதிலுக்கு ஒரு கோல் மட்டுமே அடித்தது. இறுதியில் பார்சிலோனா அணி 4-1 என்ற கோல் கணக்கில் ரியல் பெட்டிஸ் அணியை வீழ்த்தியது.

இதில், பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி (18 , 45 மற்றும் 85) ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். இதன் மூலம் மெஸ்ஸி கால்பந்து அரங்கில் தனது 51ஆவது ஹாட்ரிக்கை பதிவு செய்து அசத்தினார். அதில் 18வது நிமிடத்தில் அவர் அடித்த ப்ரீகிக் கோல் காண்போரை வாய் அடைக்க செய்தது.

மெஸ்ஸியின் இந்த மெர்சலான ஆட்டத்தை நேரில் பார்த்த ரியல் பெட்டிஸ் அணி ரசிகர்கள், ஆட்டம் முடிந்தவுடன் எழுந்துநின்று கைகளை தட்டி பாராட்டினர். பொதுவாக, எதிரணி மண்ணில் இதுப்போன்ற பாராட்டுகள் கிடைப்பது கடினம்.

இதைத்தொடர்ந்து, இந்த வெற்றியின் மூலம் பார்சிலோனா அணி 28 போட்டிகளில் 20 வெற்றி, ஆறு டிரா மற்றும் இரண்டு தோல்வி என 66 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளனர். அத்லெடிக்கோ மேட்ரிட் அணி 28 போட்டிகளில் 16 வெற்றி எட்டு டிரா மற்றும் நான்கு தோல்வி என 56 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details