ஸ்பெயினின் லா லிகா கால்பந்து தொடரில் விளையாடும் பார்சிலோனா அணி மிகவும் பிரபலமானவை. இந்நிலையில், பார்சிலோனா கால்பந்து வரலாற்றில் சிறந்த கோல் அடித்த வீரர்களின் பட்டியல் பரிந்துரைக்கப்பட்டது. 63 கோல்கள் இடம்பிடித்த இந்தப் பட்டியலில், ரசிகர்களின் வாக்கெடுப்பில் நான்குகோல்கள் மட்டுமே இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
இறுதி சுற்றுக்கு முன்னேறிய கோல்கள்:
1. 2006/07 ஆம் ஆண்டில் கோப்பா டெல் ரே தொடரில் மெஸ்ஸி கெட்டாஃபி அணிக்கு எதிரானப் போட்டியில் அடித்த கோல்.
2. 2010/11இல் சாம்பியன்ஸ் லீக் போட்டியில், மெஸ்ஸி ரியல் மேட்ரிட் அணிக்கு எதிரானப் போட்டியில் அடித்த கோல்.
3. 2014/15இல் கோப்பா டெல் ரே தொடரின் இறுதிப் போட்டியில் அத்லெடிக்கோ பில்பவ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்ஸி அடித்த கோல்.
4. 2016/17 இல் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பாரிஸ் செயின்ட் ஜெர்மன் அணிக்கு எதிராக கடைசி நிமிடத்தில் செர்ஜியோ ரொபர்டோவின் கோல் என மொத்தம் நான்கு கோல் இந்தப் பட்டியலில் இடம்பிடித்தது.
பார்சிலோவின் சிறந்த கோல் விருதை வென்றார் மெஸ்ஸி இதில், 1984 ஃபிபா உலகக் கோப்பையில் அர்ஜெண்டினா அணியின் ஜாம்பவான் வீரர் மரடோனா, இங்கிலாந்து அணிக்கு எதிராக சோலோவா அடித்த கோல் போன்றே, மெஸ்ஸி 2006/07 ஆம் ஆண்டில் மெஸ்ஸி கெட்டாஃபி அணிக்கு எதிரானப் போட்டியில், அடித்த கோல்தான் சிறந்தது என 45 சதவிகித ரசிகர்கள் வாக்களித்தனர். இதனால், பார்சிலோனா கால்பந்து அணியின் வரலாற்றில் சிறந்த கோல் அடித்ததற்கான விருதை மெஸ்ஸி வென்றார்.