தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஸ்பானிஷ் சாம்பியன்ஷிப்: பார்சிலோனாவின் இறுதி ஆட்டத்தைத் தவிர்க்கும் மெஸ்ஸி

ஈபார் நகரில் நடைபெறும் ஸ்பானிஷ் சாம்பியன்ஷிப்பில் பார்சிலோனாவின் இறுதி ஆட்டத்தில் விளையாடமால் இருக்க அணியின் கிளப் மெஸ்ஸிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Messi to skip Barcelona's final game of Spanish season
ஸ்பானிஷ் சாம்பியன்ஷிப்: பார்சிலோனாவின் இறுதி ஆட்டத்தை தவிர்க்கும் மெஸ்ஸி

By

Published : May 21, 2021, 10:07 PM IST

பார்சிலோனா:ஈபார் நகரில் நடைபெறும் ஸ்பானிஷ் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் இருந்து விளையாடமால் இருக்க கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு அணியின் கிளப் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால், கோபா அமெரிக்கா லீக் போட்டிக்கு அவர் ஓய்வெடுக்க கூடுதல் காலம் கிடைக்கும். கோபா அமெரிக்கா சீஸனோடு பார்சிலோனா அணியுடன் மெஸ்ஸி மேற்கொண்ட ஒப்பந்தம் முடிவடைகிறது.

பார்சிலோனா அணி மெஸ்ஸியுடன் புதிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள எந்த சமிக்ஞையும் காட்டவில்லை, அதேபோல், மெஸ்ஸியும் புதிய ஒப்பந்தத்திற்கான ஆர்வம் காட்டவில்லை.

33 வயதான மெஸ்ஸி தனது கால்பந்து வாழ்க்கை முழுவதையும் பார்சிலோனா அணியுடனே செலவழித்துள்ளார். ஆனால், கடந்த சீசனிலே அவர் பார்சிலோனா அணியை விட்டு வெளியேற முயற்சித்தார். மேலும், அணியின் கிளப் எடுக்கும் முடிவு தனக்கு மகிழ்ச்சியானதாக இல்லை எனவும் தெரிவித்திருந்தார். கடந்த முறையே பார்சிலோனா அணி அவரை நல்ல விலைக்கு விற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வரும் ஜூன் அன்று கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் சிலி அணியை எதிர்த்து பார்சிலோனா அணி களமிறங்கவுள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஸ்பானிஷ் சாம்பியன்ஷிப் போட்டியில், அட்லெடிகோ மாட்ரிட் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அட்லெடிகோ மாட்ரிட் பெற்ற புள்ளியிலிருந்து ஏழு புள்ளிகள் குறைவாகப் பெற்று பார்சிலோனா அணி நான்காவது இடத்தில் உள்ளது.

இதையும் படிங்க:இபிஎல்: அர்செனலைப் பந்தாடிய லிவர்பூல் 3-0 கோல் கணக்கில் வெற்றி

ABOUT THE AUTHOR

...view details