ஆண்டுதோறும் சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் உலகின் தலைசிறந்த வீரர்களைக் கௌரவிக்கும் ‘ஃபிஃபா கால்பந்து விளையாட்டில் சிறந்த வீரர்களுக்கான விருது’ வழங்கும் விழாவை, கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பதாக ஃபிபா அறிவித்திருந்தது.
இதற்கிடையில் வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலால், செப்டம்பர் மாதம் இத்தாலியின் மிலான் நகரில் நடைபெறவிருந்த ஃபிஃபா வருடாந்திர விருது வழங்கும் விழா மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது வீடியோ கான்ஃபரன்சிங் வாயிலாக ஃபிஃபா வருடாந்திர விருது வழங்கும் விழா வருகிற டிசம்பர் 17ஆம் தேதி நடைபெறும் என சர்வதேசக் கால்பந்து நிர்வாகக் குழு அறிவித்தது. அதன்படி ஆண்டின் சிறந்த வீரர், வீராங்கனை, கோல் கீப்பர், பயிற்சியாளர் ஆகிய விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்களின் பட்டியலை ஃபிஃபா இன்று (நவ.25) அறிவித்துள்ளது.
அதன்படி ஃபிஃபா விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட வீரர் / வீராங்கனைகள் விவரம்:
ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் :
- கிறிஸ்டியானோ ரோனால்டோ (போர்ச்சுகல்)
- லயோனல் மெஸ்ஸி (அர்ஜெண்டினா)
- ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி (போலாந்து)
- முகமது சலா (எகிப்து)
- நெய்மர் (பிரெசில்)
- செர்ஜியோ ரோமாஸ் (ஸ்பெயின்)
- விர்ஜில் வேன் டிஜ் (நெதர்லாந்து)
- கெவின் டி பிரையன் (பெல்ஜியம்)
- சதியோ மனே (செனெகல்)
- கைலியன் ம்பாப்பே (பிரான்சு)
- தியாகோ அல்காண்டரா (ஸ்பெயின்)
ஆண்டின் சிறந்த கால்பந்து வீராங்கனை:
- லூசி பிரோன்ஸ் (இங்கிலாந்து)
- டெல்பின் காஸ்கரினோ (பிரான்ஸ்)
- கரோலின் கிரஹாம் ஹேன்சன் (நோர்வே)
- பெர்னில்லே ஹார்டர் (டென்மார்க்)
- ஜெனிஃபர் ஹெர்மோசோ (ஸ்பெயின்)
- ஜி சோ-யூன் (கொரியா)
- சாம் கெர் (ஆஸ்திரேலியா)
- சாகி குமகாய் (ஜப்பான்)
- டிஸெனிஃபர் மரோசோன் (ஜெர்மனி)
- விவியானே மிடெமா (நெதர்லாந்து)
- வெண்டி ரெனார்ட் (பிரான்ஸ்)
சிறந்த கோல் கீப்பர் (ஆடவர்):
- அலிசன் பெக்கர் (பிரேசில்)
- திபாட் கோர்டோயிஸ் (பெல்ஜியம்)
- கீலர் நவாஸ் (கோஸ்டாரிகா)
- மானுவல் நியூயர் (ஜெர்மனி )
- ஜான் ஒப்லாக் (ஸ்லோவேனியா)
- மார்க்-ஆண்ட்ரே டெர் ஸ்டீகன் (ஜெர்மனி)
சிறந்த கோல் கீப்பர் (மகளிரி)
- ஆன்-கேட்ரின் பெர்கர் (ஜெர்மனி )
- சாரா புஹாதி (பிரான்ஸ்)
- கிறிஸ்டியன் எண்ட்லர் (சிலி)
- ஹெட்விக் லிண்டால் (ஸ்வீடன்)
- அலிசா நெய்ர் (அமெரிக்கா)
- எல்லி ரோபக் (இங்கிலாந்து)
சிறந்த பயிற்சியாளர் (ஆடவர்):
- மார்செலோ பீல்சா (அர்ஜென்டினா / லீட்ஸ் யுனைடெட்எஃப்சி)
- ஹான்ஸ்-டைட்டர் ஃபிளிக் (ஜெர்மனி / எஃப்சி பேயர்ன் முனீச்)
- ஜூர்கன் க்ளோப் (ஜெர்மனி / லிவர்பூல் எஃப்சி)
- ஜூலன் லோபெடெகுய் (ஸ்பெயின் / செவில்லா எஃப்சி)
- ஜினெடின் ஜிடேன் (பிரான்ஸ் / ரியல் மாட்ரிட் சிஎஃப்)
சிறந்த பயிற்சியாளர் (மகளிர்):
- லூயிஸ் கோர்டெஸ் (ஸ்பெயின் / எஃப்சி பார்சிலோனா)
- ரீட்டா குவாரினோ (இத்தாலி / ஜுவென்டஸ்)
- எம்மா ஹேய்ஸ் (இங்கிலாந்து / செல்சி எஃப்சி)
- ஸ்டீபன் லெர்ச் (ஜெர்மனி / விஎஃப்எல் வொல்ஃப்ஸ்பர்க்)
- ஹெக் ரைஸ் (நோர்வே / எல்எஸ்கே க்வின்னர்)
- ஜீன்-லூக் வாஸ்ஸூர் (பிரான்ஸ் / ஒலிம்பிக் லியோனாய்ஸ்)
- சேரீனா விக்மேன் (நெதர்லாந்து / டச்சு தேசிய அணி)
இதையும் படிங்க:பத்தாண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு விராட் கோலி, அஸ்வின் பெயர் பரிந்துரை!