2019-20ஆம் ஆண்டுக்கான ஸ்பெயினின் லா லிகா கால்பந்து தொடர் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரின் முதல் லீக் போட்டியில், நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி, அத்லெடிகோ பில்போ அணியை எதிர்கொண்டது. பார்சிலோனா அணி பந்தை தன்வசப்படுத்தி விளையாடியது.
கடைசி நிமிடத்தில் பார்சிலோனாவுக்கு ஷாக் தந்த அத்லெடிகோ பில்போ - La liga Fc barcelona match
லா லிகா கால்பந்து தொடரின் லீக் போட்டியில் அத்லெடிகோ பில்போ அணி 1-0 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் பார்சிலோனாவை வீழ்த்தியது.
மறுமுனையில், அத்லெடிகோ அணி அட்டாக்கிங் முறையில் ஈடுபட்டது. ஆட்டத்தின் 31ஆவது நிமிடத்தில், அத்லெடிகோ டிஃபெண்டரின் தவறான பாஸை, பார்சிலோனா அணியின் ஸ்ட்ரைக்கர் சுவாரஸ் கோலாக மாற்ற முயற்சித்தார். ஆனால் அவர் அடித்த பந்து கோல்கம்பத்தில் பட்டு திரும்பியது. இந்த நிலையில், அவரது வலது காலில் காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக அல்கான்ட்ரா களமிறங்கினார்.
பின்னர், ஆட்டத்தின் இறுதிக் கட்டமான 89ஆவது நிமிடத்தில் அத்லெடிகோ அணியின் ஸ்ட்ரைக்கர் அரிட்ஸ் அடூரிஸ் (Aritz Aduriz) பைசைக்கிள் கிக் முறையில் கோல் அடித்து மிரட்டினார். இதனால், அத்லெடிகோ பில்போ அணி 1-0 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றிபெற்றது.