கால்பந்து விளையாட்டில் தலைசிறந்த வீரராக வலம் வருபவர், அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி. இவர், அண்மையில் நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் குறித்து தரவக்குறைவான கருத்துக்களை வெளியிட்டார்.
பிரேசில் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இதைத்தொடர்ந்து, மூன்றாவது இடத்துக்கான போட்டியில் அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் சிலி அணியை வீழ்த்தியது.
இந்தப் போட்டியின் போது, சிலி அணி வீரருடன் மோதியதற்காக மெஸ்ஸிக்கு நடுவர் ரெட் கார்ட் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மெஸ்ஸி, கோபா அமெரிக்கா கால்பந்து கோப்பையை பிரேசில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக இந்தத் தொடர் ஃபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது என நினைக்கிறேன். இத்தகைய ஊழல் நிலவிய இந்தத் தொடரில் நான் ஒருபோதும் பங்கேற்க மாட்டேன் என விமர்சனம் செய்தார். மேலும், மூன்றாவது இடத்துக்கான பதக்கத்தையும் அவர் பெறவில்லை.