தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை: மெஸ்ஸி விளையாடுவதற்கு தடை? - அட்லடிக் பில்பாவோ

அட்லடிக் பில்பாவோ அணி வீரரை தாக்கிய பார்சிலோனா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி அடுத்த 12 போட்டிகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Messi facing lengthy suspension for hitting opponent
Messi facing lengthy suspension for hitting opponent

By

Published : Jan 19, 2021, 9:42 AM IST

உலகின் முன்னணி நட்சத்திர கால்பந்து வீரரும், பார்சிலோனா அணியின் கேப்டனுமாக திகழ்பவர் லியோனல் மெஸ்ஸி. நேற்று (ஜனவரி 19) நடைபெற்ற ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை இறுதி போட்டியில் பார்சிலோனா அணி - அத்லெடிகோ பில்பாவோ அணியுடன் மோதியது.

இப்போட்டியில் அத்லெடிக் பில்பாவோ அணி 3-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இப்போட்டியின் இறுதி நிமிடத்தின் போது பார்சிலோனா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி எதிரணியின் ஆசியர் வில்லலிப்ரேவை தாக்கினார். இதனையடுத்து மெஸ்ஸிக்கு களநடுவர் ரெட் கார்டு வழங்கினார்.

இந்நிலையில், வீரரிடன் பந்து இல்லாத சமயத்தில் அவரை தாக்கிய லியோனல் மெஸ்ஸிக்கு 12 ஆட்டங்கள் இடைநீக்கம் செய்து ஸ்பானீஷ் கால்பந்து கூட்டமைப்பு உத்தரவிட உள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. இத்தகவல் மெஸ்ஸியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:IND vs AUS: சுப்மன் கில் அரைசதம்; நிதான ஆட்டத்தில் இந்தியா!

ABOUT THE AUTHOR

...view details