தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மெஸ்ஸியின் முதல் மேஜிக்! - Barcelona

தலைசிறந்த கால்பந்து வீரராக திகழும் மெஸ்ஸி, பார்சிலோனா அணிக்காக தனது முதல் கோல் அடித்து இன்றோடு 14 வருடங்கள் நிறைவடைகின்றன.

மெஸ்ஸியின் முதல் மேஜிக்!

By

Published : May 1, 2019, 11:17 PM IST

Updated : May 1, 2019, 11:54 PM IST

கால்பந்து விளையாட்டில், பீலே, மாரடோனா, இவர்களுக்கு அடுத்தப்படியாக தலைசிறந்த வீரராக திகழ்பவர் மெஸ்ஸி, என்று கூறினால் அது மிகையாது.

தோற்றத்தில் சிறியவராக இருந்தாலும், விண்ணைத் தொடும் அளவிற்கு அவர் கால்பந்து விளையாட்டில் எண்ணற்ற சாதனைகள் படைத்துள்ளார். அர்ஜென்டினாவில் 1987 இல் பிறந்து இவர், தனது ஆறு வயதில் நெவல்ஸ் ஓல்ட் பாய்ஸ் அணிக்காக விளையாடித் தொடங்கினார்.

இவர், கால்பந்து விளையாட்டில் இயற்கையாகவே திறமைக் கொண்டவர். இடது கால் ( Left footed player) வீரரான இவர் நெவல்ஸ் அணிக்காக விளையாடிய போட்டிகளில், தடுப்பு வீரர்களை எல்லாம் கடந்து ஏராளமான கோல் அடித்துள்ளார். இதைத்தொடர்ந்து, ஹார்மோன்ஸ் குறைபாடு இவரது உடல் வளர்ச்சிக்கு தடையாக இருந்தது. இதை சரிசெய்ய அதிகமாக பணம் செலவு ஆகும் என்பதால், அர்ஜென்டினாவில் இருக்கும் எந்த அணியும் இவரது மருத்துவ செலவுக்கு பொறுப்பேற்கவில்லை.

இருப்பினும், மெஸ்ஸியின் திறமையை அறிந்துக் கொண்ட பார்சிலோனா அணி, அவரது மருத்துவ செலவு மொத்தத்தையும் தாங்கள் பொறுப்பேற்றுக் கொள்வதாக உறுதியளித்தது.
2000இல் ஸ்பெயினில் பார்சிலோனா ஜூனியர் அணிக்காக விளையாட ஓப்பந்தம் ஆன இவர் தனது திறமையான ஆட்டத்தால், 2005இல் பார்சிலோனா சீனியர் அணியில் விளையாடும் தகுதியை பெற்றார்.

மெஸ்ஸியின் கால்பந்து பயணத்தில் மே 1ஆம் தேதி (இன்று) அவருக்கும், அவரது ரசிகர்களுக்கும் என்றும் மறக்க முடியாது.அல்பாசிடே ( Albacete) அணிக்கு எதிரான போட்டியில் தொடங்கியது மெஸ்ஸியின் கோல் மழை. சக வீரர் ரொனால்டின்ஹோவின் அசிஸ்டால் மெஸ்ஸி பந்தை சிப் செய்து பார்சிலோனா அணிக்காக தனது முதல் கோலை அடித்தார். இதையடுத்து, மெஸ்ஸியை ரொனால்டினோ தனது முதுகில் சுமந்துக்கொண்டு கொண்டாடினார்.

இதன்பின்னர், பார்சிலோனா அணிக்காக ஒவ்வொரு ஆண்டும் மெஸ்ஸியின் மேஜிக், ரசிகர்களை திக்குமுக்காட வைத்தது. பார்சிலோனா அணிக்காக இதுவரை 700க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய இவர் 598 கோல் அடித்தது மட்டுமின்றி, லா லிகா, சாம்பியன்ஸ் லீக் போன்ற ஏராளமான கோப்பைகளை வென்று சாதனைப் படைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல், மெஸ்ஸி தற்போது முழு நேர பார்சிலோனா அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.

பார்சிலோனா அணிக்காக, மெஸ்ஸி முதல் கோல் அடித்து இன்றோடு 14 வருடங்கள் நிறைவடைகின்றன. இந்த மகிழ்ச்சியான தருணத்தை அவரது ரசிகர்கள் இணையதளத்தில் கொண்டாடி வருகின்றனர். தன்னை தலைசிறந்த கால்பந்து வீரராக உருவாக்கியதில், ரொனால்டினோவுக்கு முக்கிய பங்குண்டு என மெஸ்ஸி, பார்சிலோனா அணிக்காக தான் அடித்த முதல் கோல் பற்றி நினைவுகூர்ந்தார்.

லிவர்பூல் அணிக்கு எதிராக இன்று நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில் மெஸ்ஸி இரண்டு கோல் அடித்தால், பார்சிலோனா கிளப் அணிக்காக 600 கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார். இந்த மைல்கள் சாதனையை லிவர்பூல் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் படைப்பாரா என்ற ஆர்வத்தில் அவரது ரசிகர்கள் உள்ளனர்.

Last Updated : May 1, 2019, 11:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details