ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டிகளின் குரூப் பிரிவு போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. இதில், நேற்று நடைபெற்ற குரூப் ஏ பிரிவுக்கான போட்டியில் பிரான்ஸின் பாரிஸ் செயின்ட் ஜெர்மன் (பி.எஸ்.ஜி) - பெல்ஜியத்தின் கிளப் ப்ரூகே (Club Brugge) அணிகள் மோதின. இப்போட்டியில் இரண்டாம் பாதியில் சப்ஸ்டிட்யூட் வீரராக களமிறங்கிய பிஎஸ்ஜி அணியின் இளம் வீரர் எம்பாப்பே, ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.
#CLUPSG: மெஸ்ஸியின் சாதனையை முறியடித்த எம்பாப்பே
சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பார்சிலோனா அணியின் கேப்டன் மெஸ்ஸி படைத்த சாதனை ஒன்றை பிஎஸ்ஜி அணியின் இளம் வீரர் எம்பாப்பே முறியடித்துள்ளார்.
சாம்பியன்ஸ் லீக் போட்டியில் 27 போட்டிகளில் விளையாடியுள்ள எம்பாப்பே இதுவரை 17 கோல்களை அடித்துள்ளார். இதன் மூலம், சாம்பியன்ஸ் லீக்கில் 15 கோல்களை அடித்த மெஸ்ஸியின் சாதனையை எம்பாப்பே முறியடித்துள்ளார். மெஸ்ஸி இச்சாதனையை தனது 21ஆவது வயதில் படைத்தார், எம்ப்பாபே இச்சாதனையை தனது 20 வயதிலேயே எட்டியுள்ளார்.
அதேசமயம், சாம்பியன்ஸ் லீக்கில் குரூப் போட்டியில் பதிவான 100ஆவது ஹாட்ரிக் இதுவாகும். எம்பாப்பேவின் சிறப்பான ஆட்டத்தால் பிஎஸ்ஜி அணி 5-0 என்ற கணக்கில் இப்போட்டியில் வென்றது.