கடந்த 1986இல் உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியின் கேப்டனாக இருந்தவர், டியாகோ மரடோனா. பல்வேறு சாதனைகளைப் புரிந்த டியாகோ, ஓய்வுபெற்ற பிறகு கிம்னாசியா ஒய் எஸ்கிரிமாவின் பயிற்சியாளராகப் பணியாற்றினார். 60 வயதாகும் டியாகோ, சமீபத்தில் தான் பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேற்று(நவ.2) திடீரென உடல்நலக் குறைவு காரணமாக டியாகோ மரடோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிடைத்த தகவலின்படி, டியாகோ மரடோனாவின் உடல்நிலை மோசமாக இல்லை. அவர் மன அழுத்தம் காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில நாள்களாக சரியாக சாப்பிடாமல் சோகமாக இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும், அவருடன் தொடர்பிலிருந்த நபருக்கு கரோனா தொற்று உறுதியானதால், சில நாள்கள் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.