ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பால் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஐரோப்பிய பிரீமியர் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி, ரியல் சோசிடாட் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
இப்போட்டியின் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை விளையாடிய மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு ஆட்டத்தின் 27ஆவது நிமிடத்தில் ஃபெர்னாண்டோஸ் கோலடித்து முன்னிலைப்படுத்தினார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 1-0 என்ற கோல்கணக்கில் முன்னிலை பெற்றது.
அதன் பின்னர் நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு ஃபெர்னாண்டோஸ் (57), மார்கஸ் ரஷ்ஃபோர்ட் (64), டேனியல் ஜேம்ஸ் (90) ஆகியோர் அடுத்தடுத்த கோல்களை அடித்து வெற்றி வாய்ப்பை உறுதிசெய்தனர்.
இறுதிவரை போராடிய ரியல் சோசிடாட் அணியால் எதிரணியின் டிஃபென்ஸைத் தாண்டி ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டநேர முடிவில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 4-0 என்ற கோல்கணக்கில் ரியல் சோசிடாட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: 'தோனியுடன் விளையாட வேண்டும் என்ற கனவு நிறைவேறியது' - கிருஷ்ணப்பா கௌதம் நெகிழ்ச்சி!