இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இத்தொடரில் இன்று (ஜன.27) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி எஃப்சி அணி - வெஸ்ட் போர்ம் எஃப்சி அணியை எதிர்த்து விளையாடியது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கிய இப்போட்டியின் 6ஆவது நிமிடத்திலேயே மான்செஸ்டர் சிட்டி அணியின் இல்கே குண்டோகன் (İlkay Gündoğan) கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். அதன்பின் ஆட்டத்தின் 20ஆவது நிமிடத்தில் ஜோவா கேன்செலோ மூலம் லெய்செஸ்டர் அணிக்கு மீண்டுமொரு கோல் கிடைத்தது.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய குண்டோகன் ஆட்டத்தின் 30ஆவது நிமிடத்தில் மீண்டுமொரு கோலடித்து, முதல் பாதி ஆட்டத்திலேயே அணியின் வெற்றியை உறுதி செய்தார். பின்னர் முதல் பாதி ஆட்டத்தில் வழங்கப்பட்ட கூடுதல் நேரமான 45+2ஆவது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணிக்கு ரியாத் மஹ்ரேஸ் மூலம் மேலும் ஒரு கோல் கிடைத்தது.